ஆடைகளை அவிழ்த்து விடு: பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட அதிகாரிகள்

268

 

ஜேர்மனியின் பிராங்பர்ட் விமானநிலையத்தில் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக இந்திய பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இந்தியாவின் பெங்களூரை சேர்ந்தவர் Shruthi Basappa, இவர் ஐஸ்லாந்து நாட்டை சேர்ந்த நபரை திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. Shruthi தனக்கு ஜேர்மனியில் நடந்த அந்நீதியை பற்றி பேஸ்புக் வாயிலாக தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், நான் பெங்களூரிலிருந்து ஐஸ்லாந்துக்கு என் கணவர் மற்றும் குழந்தையுடன் ஜேர்மனி வழியாக சென்றேன்.

ஜேர்மனியின் Frankfurt விமான நிலையத்தில் என்னை அதிகாரிகள் முழு உடல் ஸ்கேன் செய்தார்கள்.

அதன் பிறகும் என்னை அனுமதிக்காத அவர்கள் மீண்டும் என்னை உடல் பரிதோதனை செய்ய என் ஆடைகளை அவிழ்க்க சொன்னார்கள்.

ஆனால் என் வயிற்றில் ஆப்ரேஷன் செய்துள்ளதாக அதற்கு உடன் படிய மறுத்து விட்டேன்.

என் கணவரை மட்டும் அவர்கள் சோதனை செய்யவில்லை. என்னிடம் மட்டும் அநாகரீகமாக நடந்து கொண்டார்கள் என கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து ஜேர்மனியின் இந்திய தூதரகத்தில் சுஷ்மா விளக்கம் கேட்டுள்ளார்.

SHARE