இறந்த பின்பும் வாழும் இலங்கை அகதி!

223

திருவண்ணாமலை – கஸ்தம்பாடியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கை அகதி ஒருவரின் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட சில உடலுறுப்புக்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கிருபாகரன் (வயது 22) என்பவரின் உடலுறுப்புகளே இவ்வாறு தானமாக அளிக்கப்பட்டுள்ளன.

கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த கிருபாகரன், வேலூர் சி.எம்.சி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று மூளைச்சாவு அடைந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய கிருபாகரனின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அவரின் இதயத்தை சென்னை மலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சத்தீஸ்கர்மாநில என்ற இளைஞனுக்கு பொருத்த முடிவானதாக குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, நேற்று பகல் 3.30 மணியளவில் கிருபாகரனின் இதயம் அகற்றப்பட்டுள்ளது.

பின்னர் அந்த இதயம் பாதுகாப்புடன் உலங்குவானூர்தி மூலமாக சென்னைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

கிருபாகரனின் கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 2 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளன.

ஒரு சிறுநீரகம் சென்னை மியாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

SHARE