சீனாவில் திருமணத்துக்கு பெண் கிடைக்காத நபர் ஒருவர் ரோபோவை திருமணம் செய்திருப்பது ஆச்சரியம் அளித்துள்ளது.
சீனாவை சேர்ந்தவர் ஜெங் ஜியாஜியா(31), இவர் பொறியாளராக வேலை செய்து வருகிறார்.
இவருக்கு சில வருடங்களாக அவர் குடும்பத்தார் திருமணம் செய்ய பெண் பார்த்து வந்தனர்.
ஆனால் ஜெங்குக்கு விருப்பப்பட்ட மாதிரி பெண் கிடைக்காமலே இருந்து வந்தது.
இந்நிலையில் திருமணமாகாத விரக்தியில் ஜெங் பெண் ரோபோவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
யிங்யிங் என்னும் பெயர் கொண்ட ரோபோவை ஜெங் திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சியில் ஜெங்கின் குடும்பத்தாரும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.
திருமணத்தில் யிங்யிங் ரோபோவின் மீது பாரம்பரிய சிவப்பு தாவணி கொண்டு அலங்கரிக்கப்பட்டு பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.