ஐரோப்பிய நாட்டு பிரஜைகள் பிரித்தானியாவுக்கு சுதந்திரமாக செல்ல வாய்ப்பு

192

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னரும் சுதந்திர நடமாட்டம் தொடர்ந்தும் அனுமதிக்கப்படலாம் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜோர்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ள பிரித்தானிய பிரதமர், அங்கு நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.

பிரித்தானிய வெளியேறுவதற்கான உடன்படிக்கை எட்டப்பட்ட பின்னர் எந்தவொரு புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்த வேண்டுமாயின், சிறிய கால அவகாசம் அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பின்னர் தமது நாட்டின் எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் 2019ஆம் ஆண்டில் பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் முடிவடையும் வரையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து புதிய வர்த்தக உடன்படிக்கைகளை பிரித்தானியா மேற்கொள்ளப்போவதில்லை.

இந்த கால அவகாசம் தொடர்பில் தற்போது வரையில் தான் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு கால அவகாசம் கட்டயமாகும். அதற்கமைய கால அவகாசத்தை ஏற்படுத்திக் கொண்டு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதற்கமைய குறைந்தது 5 வருட கால அவகாசம் தேவைப்படும்.

இந்த நிலையில் குறித்த காலப்பகுதி வரையில் பிரித்தானியாவுக்குள், ஐரோப்பிய ஒன்றிய நாட்டுப் பிரஜைகள் வருவதற்கு எவ்வித புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பில் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தெரேசா மேயின் இந்த கருத்தானது மக்களின் எதிர்பார்ப்புக்களை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளதாக தொழில் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

தற்காலிகமாகவேனும் சுதந்திர நடமாட்டம் தொடர்ந்தும் அமுல் இருப்பதற்கான சாத்திய உள்ளதையே தெரேசா மேயின் இந்த கருத்து எடுத்துக்காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

SHARE