தமிழ் சினிமாவில் தேசிய விருது வாங்கிய பிரபலங்களை கைவிட்டு எண்ணிவிடலாம். அதில் அனைவராலும் அதிகமாக அறியப்பட்டவர் மறைந்த எடிட்டர் கிஷோர்.
ஆடுகளம், விசாரணை என இரண்டு படங்களுக்கு அவர் தேசிய விருது வாங்கியுள்ளார். இப்படி விருதுகளுக்கு சொந்தக்காரரான இவர் திடீரென்று மார்ச் 6ம் தேதி 2015ம் ஆண்டு உயிரிழந்தார். இவரின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.
இந்நிலையில் இவரது தந்தை தியாகராஜன் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலை உயிரிழந்துள்ளார். இந்த தகவலை எடிட்டர் பிரவீன் அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
This is tragic news. Editor Kishore’s father Mr.Thigarajan passed away due to heart attack this morning. May he RIP. Strength to e family.