கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே மிகவும் சோகத்தை சந்தித்து வருகின்றார். கௌதமி பிரிவு, கால் உடைந்தது என்று அனைத்தையும் விட தன் அண்ணன் சந்திரஹாசன் மரணம் இவரை மிகவும் பாதித்துவிட்டது.
ரஜினிகாந்த் இதுக்குறித்து பேசுகையில் ‘கமல் இனி எப்படி சம்பாதிக்கப்போகின்றார் என தெரியவில்லை, அவருடைய அண்ணன் தான் அனைத்தையும் பார்த்துக்கொள்வார்’ என்றார்.
ரஜினி பேசியது குறித்து கமலிடம் கேட்கையில் ‘அவர் இல்லை என்றாலும் இன்னொரு அண்ணனாக ரஜினி இருக்கின்றாரே, அவர் என்னை பார்த்துக்கொள்வார்’ என்றார்.
இன்றைய தலைமுறை இல்லை என்றைய தலைமுறைக்கு ரஜினி-கமலின் நட்பே பலருக்கும் உதாரணமாக திகழும்.