தங்கை அழகு மீது பொறாமை.. கண்களை பிடுங்கி, காதுகளை அறுத்து 140 முறை குத்தி கொன்ற கொடூர அக்கா

216

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவில் 17 வயது மாடல் அழகியை அக்காவே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கை அழகான மாடலாக இருப்பதை பொறுக்க முடியாமல் பொறாமையில் அவரின் கண்களை பிடுங்கியும் காதுகளை அறுத்தும் கொன்றுள்ளார்.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வசித்து வருபவர் ஸ்டெஃபானியா டுப்ரோவினா. 17 வயதான இவர் மாடல் அழகியாக உள்ளார்.

இந்நிலையில் அவரை யாரோ கொலை செய்துவிட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் ஸ்டெஃபானியா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

SHARE