டிரம்ப் செயல் அதிருப்தி அளித்தால்…மகள் இவான்கா பரபரப்பு பேட்டி

226

அமெரிக்க ஜனதிபதியான தனது தந்தை டிரம்பின் செயல்பாடு அதிருப்தி அளித்தால் அதை அவரிடமே வெளிப்படையாக விமர்சிப்பேன் என டிரம்ப்பின் மகள் இவான்கா கூறியுள்ளார்.

ஆடை வடிவமைப்பு, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டிருந்த இவான்கா, தன்னுடைய தந்தையும் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப்புக்கு ஆலோசகராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியளித்த இவான்கா கூறியதாவது:

பெண்களுக்கு அதிகாரமளிப்பது குறித்தும், கல்வித் துறை மேம்பாடு குறித்தும் நான் தொடர்ந்து அழுத்தமாக குரல் கொடுத்து வருகிறேன். ஜனாதிபதியின் ஆலோசகர் என்ற வகையிலும் அந்தப் பணிகளைத் தொடர்ந்து செய்வேன்.

தந்தை – மகள் என்ற உறவு எப்போதும் இருக்கும். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலோ, ஜனாதிபதி என்ற முறையில் அவருடைய செயல்பாடு அதிருப்தி அளித்தாலோ அதை அவரிடமே வெளிப்படையாகக் கூறி விமர்சிப்பேன்.

எல்லா விவகாரங்களைக் குறித்தும் நாங்கள் விவாதிப்போம். பல விஷயங்களில் நாங்கள் ஒரே கருத்தைக் கொண்டிருந்தாலும் எனக்கு ஏற்புடையதாக இல்லை எனத் தோன்றுவதை அவரிடம் கூறுவேன் என தெரிவித்துள்ளார்.

SHARE