தல அஜித்-சிவா கூட்டணி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறது. வீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து தற்போது விவேகம் படத்தை இயக்கிவருகிறார் சிவா. இந்த படம் பல்கேரியாவில் படமாகி வருகிறது.
இந்நிலையில் விவேகம் முடித்தபிறகு, சிவா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணையவுள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது.
2.0 ஷூட்டிங் முடிந்துவிட்ட ரஜினி அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அது முடிந்ததும் சிவாவுடன் ஒரு மாஸ் படம் தொடங்கும் என நெருங்கிய வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கபாலி படம் நடிக்க துவங்கும் முன்னரே சிவா இயக்கத்தில் நடிக்க ஆசைபட்டாராம் ரஜினி ஆனால் அப்போது அவரிடம் கதை இல்லாததால் கூட்டணி இணைவது பல வருடங்கள் தள்ளிபோயுள்ளது.