இணைய விபச்சாரம்! என்றால் என்ன?கல்லூரி மாணவி வேண்டும் என கேட்டால் அதற்கு ஏற்ப பேரமதிப்பு ஏறும் அவ்வளவே

1431

 

எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் நல்ல விஷயத்திற்காகவும் கெட்ட விஷயத்திற்காகவும் பயன்படுத்த முடியும். அதனை மனிதர்கள் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தது அது. இதற்குத் தொலைகாட்சி முதல் ராடார் வரை அநேக உதாரணங்களைக் கூறலாம். அந்தப் பட்டியலில் இணையமும் அடங்கும்.

இணையம் ஒரு கட்டில்லா களஞ்சியமாகும். சிறு குழந்தை முதல் இறக்கும் தருவாயில் உள்ள மனிதர் வரை அனைவருக்கும் பல விதங்களில் அவர்களுக்குத் தேவையான பல விஷயங்களைக் கடல் போல் அடக்கி வைத்துள்ளது என்றால் மிகையில்லை.

இன்று இணையம் மூலம் வியாபாரம் என்பது இந்த நூற்றாண்டின் இணையற்ற புரட்சிகளில் ஒன்றாகும். வியாபாரம் என்றால்…. என்ன வியாபாரம் வேண்டுமானாலுமா? என்றொரு கேள்வி எழுவது இயல்பு!

அதற்கு விடையளிக்கும் விதத்தில் முன்னுதாரணமாக, இந்தியாவிலேயே கல்வியறிவில் முன்னணியில் நிற்கும் மாநிலம் என மெச்சிக் கொள்ளும் கேரள மாநிலம் நிற்கிறது. ஆம், இணையம் மூலமாக பெண்/ஆண் வியாபாரம் கேரளாவில் கொடிகட்டிப் பறக்கிறது.

இதனை ஆதாரப்பூர்வமாக மனோரமா நியூஸ் என்ற கேரள ஊடகமே வெளிக்கொணர்ந்துள்ளது. மனோரமா நியூஸின் புலனாய்வு நிருபர்கள் குழு ஒன்று, தங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியக் கூடிய சாத்தியம் உள்ள இந்த அபாரச் செயலைச் செய்துள்ளனர்.

கொச்சியை மையமாக வைத்து இயங்கும் ஒரு மிகப் பெரிய “இணைய விபச்சார குழுவினைக்” குறித்த செய்தியினை வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன் வெளிக் கொணர்ந்துள்ளனர்.

பல்வேறு “girlsfinder” போன்ற ஆபாச தளங்களில் தொடர்பு கொள்க என்ற பெயரில் தங்களின் மார்க்கட்டிங் தொலைபேசி எண்களைப் போட்டு வைத்துள்ளனர். அதில், தொடர்பு கொள்ளும் நபர்களை வசதிக்கு ஏற்பவும் செல்லும் நேரத்திற்கு ஏற்பவும் 1 மணி நேரத்திற்குக் குறைந்தது 10,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாய் வரை பேரம்பேசி பெண்களை அனுப்புகின்றனர்.

இதில் மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவெனில், இவ்வாறு அனுப்பப்படும் பெண்களில் கல்லூரி மாணவிகளும் உள்ளது தான். கல்லூரி மாணவி வேண்டும் என கேட்டால் அதற்கு ஏற்ப பேரமதிப்பு ஏறும் அவ்வளவே!

கல்லூரிக்குப் படிக்க அனுப்பும் தங்கள் பெண் பிள்ளைகள், கல்லூரில் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கின்றனர் என நம்பியிருக்கும் பெற்றோர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும் அதிர்ச்சிகரமான செய்தி இது!

தற்போது வெளியாகி இருக்கும் இத்தகவல் கேரளா முழுவதும் மிகுந்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோரே, உங்கள் பிள்ளைகள் கல்லூரிக்குச் செல்பவரா? இணையம் உபயோகிப்பவரா? கவனமாக இருங்கள்! அதனை நல்லதுக்கும் பயன்படுத்தலாம்; கெட்ட விஷயத்திற்கும் பயன்படுத்தலாம்!

SHARE