இங்கிலாந்தில் இந்திய பெண்ணுக்கு சிறந்த பெண் தொழிலதிபர் விருது

265

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆஷா கேம்கா என்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு, ஆசியாவின் சிறந்த பெண் தொழிலதிபர் விருது வழங்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆஷா கேம்கா. இவர் தனது 25-வது வயதில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இங்கிலாந்து சென்றார். பின் அங்கு வெஸ்ட் நாட்டிங்கம் கல்லூரியின் முதல்வர், சி.இ.ஓ என்ற இரு பொறுப்புகளுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். கல்வியில் இவரது பங்களிப்புக்காக ஏற்கெனவே பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார்.

ஆஷா இங்கிலாந்து சென்ற போது அவருக்கு ஆங்கிலம் தெரியாதாம். பின் குழந்தைகள் டி.வியயை பார்த்தும் மற்றும் பிற குழந்தைகளின் தாய்களுடன் பேசியும், ஆங்கிலத்தை வளர்த்துள்ளார். இந்நிலையில், தற்போது, சிறந்த ஆசிய பெண் தொழிலதிபர் என்ற விருதை பெற்றுள்ளார் ஆஷா. ‘Morningside Pharmaceuticals’ நிறுவனம், ஆசியாவின் சிறந்த வணிகத்துக்கான விருதையும், ரீல் சினிமாஸின் நிர்வாக இயக்குநர் கைலாஷ் சூரி சிறந்த தொழில் முனைவோர் விருதையும் பெற்றுள்ளனர்.

SHARE