பிரித்தானியா, பிரான்ஸ் பிரஜைகளின் முடிவால், நெருக்கடியில் இலங்கை

275

பெரும் வருவாயை ஈட்டிய சுற்றுலாத்துறை வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 3 மாதங்களாக இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 3.4 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் 604953 பேர் வருகை தந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் மாத்திரம் 188076 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த எண்ணிக்கை 2016 ஆண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ள 192,841 சுற்றுலா பயணிகளுடன் ஒப்பிடும் போது, அது 2.5 வீத வீழச்சியாக பதிவாகியுள்ளது.

சீனாவில் இருந்து வருகைத்தந்துள்ள பயணிகளின் எண்ணிக்கை 12.9 வீதமாக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து வருகை தந்துள்ளதாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் சற்று அதிகரிப்பை காண முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய 3677 சுற்றுலா பயணிகளில் இந்தோனேசியாவில் இருந்து அதிகமான வருகைத்தந்துள்ளனர். அது 82.9 வீத அதிகரிப்பாகும்.

எப்படியிருப்பினும், இந்தியாவில் 10.3 வீதமும் (27,075 பயணிகள்) மாலைதீவில் 10 வீதமும் (8,076 பயணிகள்), பாகிஸ்தானில் 10.4 வீதமும் (2,433 பயணிகள்) சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வீச்சியடைந்துள்ளன.

மேற்கு ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 6.2 வீதம் வீழச்சியடைந்துள்ளன.

அதற்கமைய மார்ச் மாதத்தில் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ள நாடுகளின் பட்டியிலில் இந்தியாவில் இருந்து 84,568 பயணிகளும், சீனாவில் இருந்து 79,222 பயணிகளும், ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்து 59,137 பயணிகளும், பிரான்சில் இருந்து 36,057 பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கையின் பிரதான சர்வதேச விமான நிலையம் கடந்த நான்கு மாதங்களாக திருத்தும் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்காரணமாக விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இதுவே சுற்றுலா பயணிகளின் வீழ்ச்சிக்கு காரணமாகும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சமகாலத்தில் இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கி செல்கிறது. ரூபாயின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி நோக்கி செல்கிறது.

நாட்டிலிருந்து பெருமளவு முதலீடு வெளியேறியமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும், பெரும் வருவாயை ஈட்டிய சுற்றுலாத்துறை வீழ்ச்சியை சந்தித்துள்ளமையானது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவு என பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE