சிங்கள அரசும், இந்தியாவும் சேர்ந்துதான் ஈழத்தமிழர்களை கொன்று குவித்தது: பிரபல நடிகர்

275

ஈழத்தமிழர்கள் பிரச்சனை என்பது 5 அல்லது 10 நிமிடத்தில் பேசி முடிக்கும் பிரச்சனை அல்ல, இது ஒரு உலக அரசியல் என நடிகர் ராஜ்கிரண் கூறியுள்ளார்.

ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து நடிகர் ராஜ்கிரண் கூறியதாவது, இந்தியாவும் சிங்கள அரசும் சேர்ந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை அழித்தார்கள்.

இந்த இன அழிப்பு மிகக்கொடூரமான ஒன்று. பல்லாயிரக்கணக்கான போராளிகளை சிங்கள அரசு சித்ரவதை செய்துள்ளது.

அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. உலகத்திலேயே நடக்கூடாத ஒரு கொடூரம் இதுதான்.

இவற்றையெல்லாம் பார்த்து நம்முடைய கருத்துக்களையும், ஆதங்கத்தையும் பகிர்ந்துகொள்ள முடியுமே தவிர, எதையும் செய்ய முடியாது.

ஈழத்தமிழர்கள் பிரச்சனை குறித்து சில கட்சிகள் பேசுவது எல்லாம் மிகப்பெரிய நாடகம்.

அவர்களுக்கே தெரியும் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்று, ஏனெனில் ஈழத்தமிழர்கள் விவகாரம் என்பது மிகப்பெரிய உலக அரசியல்.

தங்களுடைய கட்சியை பலப்படுத்திக்கொள்வதற்காக ஈழத்தமிழர்கள் மற்றும் பிரபாகரன் பெயரை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என கூறியுள்ளார்.

SHARE