மனைவியை கொலை செய்த இலங்கையரை நாடு கடத்த உத்தரவு!

232

தமது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளவரை நாடு கடத்துமாறு கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை கட்டளையிட்டுள்ளது.

ரேடியோ கனடா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

எனினும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சிவலோகநாதன் தனபாலசிங்கம், இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியும்.

இந்த நிலையில் அவரை நாடு கடத்தும் கட்டளையை நடைமுறைப்படுத்த காலம் செல்லும் என்று கனேடிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

2012ம் ஆண்டு தமது மனைவியான அனுஜா பாஸ்கரனின் சடலம் குடியிருப்பு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்து சிவலோகநாதன் தனபாலசிங்கம் கைது செய்யப்பட்டார்.

SHARE