சிம்புவுக்கு மீண்டும் இப்படி ஒரு சிக்கலா? படக்குழு ஏமாற்றம்

188

நடிகர் சிம்பு என்றாலே அவர் சந்தித்த சிக்கல்கள் உங்களுக்கே நன்றாக தெரிந்திருக்கும். நாங்கள் சொல்லி தெரியவேண்டியதில்லை. சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் அவருக்கு மகிழ்ச்சியை தந்தது.

தற்போது அவர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் AAA படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவரது கெட்டப் இருக்கும் படியான போஸ்டர்கள் பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.

கடைசி கட்ட படப்பிடிப்புகள் தாய்லாந்து நாட்டில் நடத்த படக்குழு அங்கும் சென்றது. ஆனால் ஷூட்டிங் எடுக்க முறையான அனுமதி கிடைப்பதில் சிக்கல் இருந்ததால் படக்குழு மீண்டும் சென்னை வந்துவிட்டதாம்.

நம்பிப்போன படக்குழுவிற்கு இதனால் சிறு ஏமாற்றமே. பாவம் சிம்பு இது போல சிக்கல்களை சந்தித்து பின் ஜெயிப்பது அவர் வாங்கிய வரம் போல.

மீதமிருக்ககூடிய படக்காட்சிகள் ஹைதராபாத் ராமோஜி ராவ் சிட்டியில் ஷெட் போட்டு ஷூட்டிங் எடுக்கப்போகிறார்களாம்.

SHARE