கல்லறையை கூட விட்டுவைக்காத கயவர்கள்

181

உத்திரபிரதேச மாநிலத்தில் பிணத்துடன் உறவு கொண்ட ஆண்களின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கசியாபாத் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் குழந்தை பெற்றெடுக்கும்போது இறந்துபோனார்.

இவரது உடல் அப்பகுதியில் உள்ள கல்லறையில் புதைக்கப்பட்டது.

இந்நிலையில், புதைக்கப்பட்ட பெண்ணின் உடலைத் தோண்டி எடுத்து இரண்டு இளைஞர்கள் உறவு வைத்துக் கொண்டுள்ளார்கள். உறவு கொண்ட பின்னர் பிணத்தை நிர்வாணமாக போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து 20 அடி தூரத்தில் இருந்த அந்தப் பெண்ணின் உடலைப் பார்த்த மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு பொலிசில் புகார் அளித்துள்ளார்கள்.

அதன்படி, ”அந்தப் பெண்ணைக் குழுவாகச் சேர்ந்து, கொடூரமாகப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளனர் என்றும், அவர்கள் 20 அடி தூரத்தில்வைத்து இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர்” என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் இரண்டுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கலாம் என்றும், 4.5 அடி பள்ளத்தைத் தோண்டி அவர்கள் எடுத்துள்ளார்கள் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகையக் கொடூரச் செயலைச் செய்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அக்கிராம மக்களும், அப்பெண்ணின் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE