1. பள்ளி செல்ல ஆரம்பிக்கிற 3 அல்லது 4 வயதில் 9 அல்லது 10 மணி நேர தூக்கம் இருக்கும்.
2. 4 முதல் 8 வயதில் இரவு 9 மணி நேரம், மதியம் ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் தூங்குவார்கள்.
3. வளர் இளம் பருவத்தினருக்கு இரவில்8 மணி நேரம் தூக்கம் வேண்டும். முடிந்தால் 9 மணி நேரத் தூக்கம் நல்லது.
4. பெரியவர்கள் 6 மணி நேரம்தூ ங்குவதே போதுமானது! தூங்குவது 5 மணி நேரம் என்றாலும் தொடர்ச்சியான தூக்கமாக இருக்க வேண்டும்.
5. தூக்கமின்மையால் 40 வயதுக்குமேல் ஏற்படும் ரத்த அழுத்தம், நீரிழிவு, பக்கவாதம் போன்ற குறைபாடுகள், இளவயதிலேயே வரும் சாத்தியங்களும் உள்ளன.
துக்கத்தை மறந்து தூக்கம் செய்யுங்கள். வாழ்க்கை வளம்பெறும்.
பல்வேறு அழுத்தங்களால் நம் நாள் முழுவதும் பதற்றங்களாலேயே நிரம்பியிருக்கிறது. இதன் எதிரொலியாக படுக்கையில் விழும்போதும் பல பிரச்னைகள் மனதை அரிப்பதால் தூக்கம் தொலைகிறது. ‘இன்று இரவு நன்றாகத் தூங்கி எழுந்து,காலையில் தெம்பாகபிரச்னைகளை ஒரு கை பார்த்துக் கொள்ளலாம்’ என்ற மனநிலையோடு தூங்குங்கள்