அக்குரஸ்ஸ நகரிலுள்ள முஸ்லிம் கடைகள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இத் தாக்குதலினால் ஐந்து கடைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், குண்டுச்சத்தம் கேட்டதை அடுத்து கடையின் பின்புறமாக இருந்தவர்கள் ஓடிவந்து கடையில் பற்றிய தீயை அணைத்ததால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்குரஸ்ஸ நகரின் 15 முஸ்லிம் கடைகள் காணப்பட்டுள்ளதாகவும், ஐந்து கடைகள் ஒரே பக்கத்தில் உள்ளன. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் மேற்படி ஐந்து கடைகள் உள்ள பக்கமாக பெற்றோல் குண்டு ஒன்று வீசப்பட்டுள்ளது.
கடையின் கதவுகள் உட்பட முன்பக்கம் சேதமடைந்துள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அக்குரஸ்ஸ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.