கஸ்தூரியின் மகளா இவர்?

164

சினிமா என்றாலே ஆடம்பரத்திற்கு பஞ்சமிருக்காது. சினிமா பிரபலங்கள் எப்போதுமே தங்களை ஆடம்பரமாகவே காட்டிக்கொள்ள விரும்புவார்கள்.

இவர்களைப்போலவே தற்போது மேல்தட்டு, நடுத்தர குடும்பங்கள் கூட தங்களையே பகட்டாகவே காட்ட விரும்புகின்றனர். தங்களின் குழந்தைகள் விரும்பும் அனைத்தையும் வாங்கித்தருகின்றனர்.

இன்று பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு தேவையில்லாமல் விலையுயர்ந்த பொருட்களை வாங்கித்தருவதைப்பற்றிய நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார்.

இதில் தனது மகளை அறிமுகப்படுத்தும் போது, பிறந்தநாளன்று கூட அந்த சிறுமி மிகவும் சாதாரண உடையே அணிந்து கூந்தலை பின்னி வந்திருந்தார். பலருமே ஆச்சர்யப்படும் விதமாகவே இருந்தார்.

கஸ்தூரி கூறும் போது, எனது மகளுக்கு தேவையானதை மட்டும்தான் வாங்கித்தருவேன், தேவையற்ற ஆடம்பரங்களை தவிர்த்து விடுவேன் என்றார்.

மேலும், கஸ்தூரி பல வருடங்கள் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகி இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE