தனுஷ் தற்போது இயக்குனர் என்னும் அந்தஸ்தை பெற்றுள்ளார். அவரின் இயக்கத்தில் முதல் படமான பா.பாண்டி இன்னும் பலரின் நல் விமர்சனத்தை பெற்றுவருகிறது.
தற்போது அவர் இது குறித்து மனம் திறந்துள்ளார். என்னால் படம் பற்றி முழுமையாக சொல்ல முடியாது. அப்படி சொல்ல 15 நாட்கள் ஆகும்.
ரஜினி, மோகன் பாபு ஆகியோர் இப்படத்தை 2 வாரத்திற்கு முன்னரே பார்த்து விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் இது உறுதியாகவில்லை.
விஐபி 2, பாலாஜி மோகன் படங்களை தொடர்ந்து தனுஷ் கார்த்திக் சுப்புராஜ இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம், இதற்கான பணிகள் அக்டோபரில் துவங்குகிறது என்றும் கூறியுள்ளார்.