உடல் எடையினை குறைப்ப நினைப்பவர்கள் டயட், உடற்பயிற்சி போன்ற பலவற்றினை செய்வார்கள்.
இது மட்டுமல்லாமல் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பானங்களை அருந்தும் வழக்கமும் உண்டு.
இரவு முழுதும் உண்ணாமல் இருப்பதால் உடலில் உள்ள உணவுகள் செரிக்கப்பட்டு இரைப்பையானது அமிலத்தினை சுரக்க ஆரம்பித்து இருக்கும். அவ்வேளையில் அனைத்து சாறுகளையும் குடிக்க இயலாது.
தண்ணீர் குடித்தல்
காலை எழுந்து பல் துலக்கியதும் நாள் முழுதும் நாம் குடிக்கவேண்டிய தண்ணீர் கால் பங்கினை குடிக்கவேண்டும்.
சிலர் வெந்நீரை குடிப்பார்கள், ஆனால் குளிர்ந்த நீரே வயிற்றில் சுரக்கும் அமிலத்தினை சமன்செய்து செரிமான பிரச்சனைகளை தீர்க்கும்.
தொடர்ந்து தண்ணீரை குடுத்து வருவதால் உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, உடற்பருமன், சிறுநீரக கோளாறு, சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.
வெந்தய நீர்
வெந்தயத்தினை அப்படியே சாப்பிடுவது, மோரில் போட்டு சாப்பிடுவது போன்றவை செரிமான பிரச்சனைகளை உண்டாக்கி மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
இரவில் வெந்தயத்தினை நீரில் ஊற வைத்து அந்த நீரை வெந்தயத்துடன் மறுநாள் காலை வெறும் வயிற்றில் பருக வேண்டும்.
அருகம்புல் சாறு
வயிற்றுப்புண் உள்ளவர்கள் அருகம்புல் சாற்றினை பருகினால் புண்ணானது விரைந்து ஆறிவிடும். அருகம்புல் பொடி என்று பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுவது நல்லதல்ல.
அருகம்புல்லின் தண்டுப்பகுதியே மருத்துவக்குணமுடையது. அதன் இலையின் நுனிப்பகுதி நச்சுத்தன்மையுடையது.
இதனை அரைத்து பருகும்போது வயிற்றுப்போக்கினை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அருகம்புல்லினை வீட்டிலேயே அரைத்து வெந்நீருடன் பருகுவது நல்லது.
வெள்ளைப்பூசணி சாறு
தினம் வெறும் வயிற்றீல் வெள்ளைப்பூசணி சாற்றினை குடித்து வந்தால் உடல் எடை, தொப்பை குறையும். இதனுடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கொண்டால் முழு பயனும் கிடைக்கும்.
ஆனால் இது குளிர்ச்சி மிக்கது. எனவே 7 மாதத்திற்கு மேல் உள்ள கர்ப்பிணிகள் மற்றும் 3 வயது குழந்தைகள் இதனை தவிர்ப்பது நல்லது.
நீராகாரம்
காலையில் நீராகாரம் அருந்துவதால் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட்டானது கிடைக்கும். மேலும் உடல் குளிர்ச்சியடையும்.
நீராகாரத்தினை மோர் சேர்த்து குடிக்கும்போது அதில் உள்ள லேக்டோபேசில்லஸ் என்னும் பாக்டீரியா உடலுக்கு நன்மை அளித்து, விட்டமின் உற்பத்தியினை பெருக்கும்.
எலுமிச்சை சாறு
வெறும் வயிற்றில் சூடான நீரில் எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும், ஆனால் இது நல்லதல்ல.
காலை வேளையில் வயிற்றில் சுரக்கும் அமிலத்துடன் எலுமிச்சையில் உள்ள அமிலம் சேர்ந்து அஜீரணத்தினை ஏற்படுத்திவிடும்.
உடல் எடையினை குறைக்க வெந்நீரில் தேன் கலந்து குடித்தாலே போதுமானதாகும்.