பொறுமை காக்க முடியாது…நாங்கள் தயார்: எச்சரிக்கும் அமெரிக்கா

189

 

தென் கொரியா மற்றும் வடகொரிய நாடுகளின் எல்லைப்பகுதியில் அமெரிக்காவின் துணை அதிபர் திடீர் ஆய்வு நடத்தியுள்ளார்.

வடகொரியாவின் அணு ஆயுத சோதனை குறித்து ஐநா கண்டனம் தெரிவித்திருந்தாலும், நாங்கள் அடுத்தடுத்து அணு ஆயுத சோதனை நடத்துவோம் என்று வடகொரியா வெளியுறவு அமைச்சர் ஹான் சாங்-ரையோல் கூறியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் நேற்று வடகொரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தென்கொரிய ராணுவ முகாமுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, வடகொரியா தனது அணு ஆயுத திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும்.

வட கொரியா விவகாரத்தில் இனியும் பொறுமை காக்க முடியாது, நாங்கள் எதற்கும் தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார்.

SHARE