தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அதிமுக அரசில் புயல் வீசி வந்தது. அந்த புயல் இன்று கரையை கடந்தது.
ஆம் அதாவது, அதிமுகவின் தொண்டர்கள் 1.5 கோடியினரின் விருப்பப்படி கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலா குடும்பத்தை தவிர்த்து, அதிமுகவை காப்பாற்றுவோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக, ஜெயலலிதாவின் நிழலாக இருந்து கட்சியையும், ஆட்சியையும் தனது விருப்பப்படி செயல்படுத்தி வந்தவர்தான் சசிகலா.
ஜெயலலிதா இறந்தது மர்மமாக உள்ளது. அவர் இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்தார்.
அந்த கோரிக்கையை, தனக்கு முதல்வர் பதவி இல்லை என்பதாலே வைத்தார். அவர் சசிகலாவுடன் இருந்தபோது ஏன் இப்படி கூறவில்லை என்று பலர் கேள்வி எழுப்பி வந்த நிலையில்,
சசி அணி, பன்னீர் அணி என்று பிரிந்தது. அதிமுக பொதுச் செயலாளா் பதவியை கைப்பற்றிய சசிகலா, முதல்வர் பதவியையும், கைப்பற்ற ஆசைப்பட்டார்.
அதற்குள் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியாகி சசிகலா சிறைக்கு சென்றார். ஆட்சியும், கட்சியும் சசியின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தனது அக்கா மகனான தினகரனை துணைப் பொதுச் செயலாளராக்கினார்.
இந்த நிலையில் தமிழக அரசு ஜெயிலில் இருக்கும் சசிகலாவின் முடிவின் படி நடந்து வந்தது.
ஆர்.கே.நகர் இடைத் தோ்தலில் தினகரன் வேட்பாளராக தன்னை தானே
அறிவித்துக் கொண்டு போட்டியிட்டார். இதனிடையில் தோ்தல் ஆணையம், இரட்டை இலையை முடக்கியது.
ஆர்.கே.நகர் இடைத் தோ்தலில் பணமழை பெய்தது. இதில் உஷாரான மத்திய அரசு அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உட்பட 35 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. இதில் பல கோடி பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியது.
தனது டெல்லி லாபி மூலம், தளவாய் சுந்தரம், தினகரன் ஆகியோர் 130 கோடி பணம் கொடுத்து இரட்டைஇலையை கைப்பற்ற முயன்றனர்.
டெல்லியில் அதற்காக செயல்பட்ட புரோக்கர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தினகரன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற எண்ணத்தில் தினகரன் இருந்த நிலையில் மத்திய அரசு தம்பிதுரையை மடக்கியது.
செயல்படாத டம்மி முதல்வராக இருந்த எடப்பாடியும், செயல்பட முடியாத அமைச்சர்களும் சசி குடும்பத்தில் இருந்து அதிமுகவையும், கட்சியையும் விடுவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.
அதன்படியே, பன்னீரும் இணைவதற்கு வந்தால் பேசுவோம், இணைவோம் என்று அறிவித்தார்.
அவரது அறிவிப்பை, தம்பிதுரையும் வரவேற்றார். நேற்று நள்ளிரவு அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. இதில் சில அமைச்சர்களை தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
அப்போது இரட்டை இலையையும், கட்சியையும் காக்க ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இன்று 122 எம்எல்ஏக்கள் உடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கப்பலில் ஆலோசனை நடத்தினார். அதுபோல இன்று இரவு எடப்பாடி தலைமையில் அவரது வீட்டில் அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது.
இதில் தினகரன் குடும்பத்தை, ஆட்சியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விரட்டுவதாக அறிவித்தனர் அப்படியானால் அது சசியை கட்சியில் இருந்தும் ஆட்சியில் இருந்தும் விரட்டுவதே ஆகும்.
இந்த நிலையல் சசிக் குடும்பத்துக்கு ஆதரவாக சில அமைச்சர்கள் அதாவது செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், மற்றும் சில எம்எல்ஏக்கள் இந்த முடிவுக்கு உடன் பட மாட்டார்கள் என தெரிகிறது.
அப்படியானால் சசியின் தீவிர ஆதரவாளர்களாக 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அவர்கள் இணைந்து ஆட்சியை கலைக்கக்கூடும். இல்லை என்றால் மத்திய அரசால் ஆட்சி கலைப்பு செய்யக்கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.