சிவகார்த்திகேயனுக்காக இப்படி ஒரு முடிவு எடுத்தாரா சமந்தா

176

 

 

சமந்தா தற்போது இரும்புதிரை, அநீதி கதைகள், விஜய் 61 என பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார். விரைவில் சிவகார்த்திகேயன் படத்திலும் இணைந்து நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் சமந்தா, சிலம்பம் கற்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை சமந்தா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏற்கெனவே ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன், சமந்தாவுடனான படப்பிடிப்புக்கு நீண்ட நாட்கள் இருக்கிறது. ஆனால் அவர் படத்துக்காக இப்போதே பயிற்சிகள் எடுத்து வருகிறார் என்று கூறியிருந்தார்.

சமந்தா புதிதாக கற்றுக்கொண்டிருக்கும் இந்த சிலம்பம் சிவகார்த்திகேயன் படத்துக்காகவோ என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

SHARE