வடகொரியாவை அழிக்க மெகா குண்டு தயார் செய்த அமெரிக்கா: அதிர்ச்சி தகவல்

206

வடகொரியாவின் அணுசக்தி தொழிற்சாலைகளை அழிக்க அமெரிக்க பெரிய வெடிகுண்டு ஒன்றை தயார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்க இராணுவத்தினர் கடந்த வாரம் ஆப்கானிஸ்தானின் ஐஎஸ் தீவிரவாதிகள் முகாமிட்டிருந்த பகுதியை நோக்கி வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் அமெரிக்கா அன்னை வெடிகுண்டு என்று அழைக்கப்படும் MOAB என்ற வெடிகுண்டை பயன்படுத்தியது.

இராணுவவீரர்களின் செயல்பாடுகளைக் கண்டு அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் அவர்களை பாராட்டினார். இந்த ஆயுதத்தை அமெரிக்கா முதல் முறையாக பயன்படுத்தியது.

இந்நிலையில் அமெரிக்கா ஒரு ரகசிய வெடிகுண்டு ஒன்றை தயார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வெடிகுண்டு வடகொரியாவின் அணுசக்தி தொழிற்சாலைகளை அழிப்பதற்கு தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது சுமார் 14,000 கிலோ எடை கொண்டது எனவும், அமெரிக்காவின் ஒரு துறைமுகம் ஒன்றில் ரகசியமாக தயார்செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகளவில் சக்தியை வெளிப்படுத்தி வெடிக்கும் திறன் கொண்டது எனவும் கூறப்படுகிறது.

SHARE