இஸ்ரேல் நாட்டில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 17 வயதான இஸ்லாமிய பெண்ணிற்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலில் குடியேறிய இஸ்லாமிய பெற்றோருடன் Malak Salman என்ற 17 வயதான இளம் பெண் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்தாண்டு ஜெரூசலம் நகருக்குள் இஸ்ரேல் ராணுவ வீர்கள் வருவதை அறிந்த இளம்பெண் நகருக்குள் நுழையும் இடத்தில் வீரர்களுக்காக காத்திருந்துள்ளார்.
குறிப்பிட்ட அந்த இடத்திற்கு வீரர்கள் வந்தவுடன் இளம்பெண் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, இளம்பெண்ணை பிடித்து அவரிடம் சோதனை செய்தபோது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வீரர்களை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
எனினும், வீரர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. வீரர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக கூறி இளம்பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
ஆனால், செய்த தவறை ஒப்புக்கொண்ட இளம்பெண்ணிற்கு இதுபோன்று கடுமையான தண்டனை வழங்க கூடாது எனவும், இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளதாக இளம்பெண்ணின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.