ரஷ்யாவில் பனிப்பாறை சரிந்து நகரத்திற்குள் புகுந்த பயங்கரம்

192

ரஷ்யா மலையில் பனிச்சரிவு ஏற்பட்டு பனிப்பாறைகள் நகரத்திற்குள் புகுந்த உறைய வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

ஐரோப்பாவின் பெரிய மலையான Elbrus அருகே Terksol பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் குறித்த காட்சியை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

அதில், திடீரென மலையிலிருந்து சரியும் பனிபாறைகள் நகரத்தை நோக்கி அபாயகரமாக வருகிறது. இதைகண்டு பயத்தில் உறைந்த அந்த பயணி தனது பெற்றொர்களுக்கு பிரஞ்சு மொழில் பிரியாவிடை அளித்தபடி காட்சியை பதிவு செய்கிறார்..

எனினும், புயல் வேகத்தில் சரிந்த பனிப்பாறைகள் அதிர்ஷ்டவசமாக நகரத்திற்குள் புகாமல் நின்றது.

அப்போது, பெரிய வெள்ளை மோகங்கள் மிக அருகில் தோன்றியது போல் இருந்துள்ளது. குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE