சிறுநீரக மாற்றீடு செய்தவர்களில் பரவும் புதிய வைரஸ்: எச்சரிக்கை தகவல்

156
 

சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகி தமது சிறுநீரகங்களை முற்றிலுமாக நீக்கி புதிய சிறுநீரகத்தினை பொருத்திக்கொண்டவர்களில் வைரஸ் தொற்று ஒன்று ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Hepatitis C எனும் வைரஸே இவ்வாறு அதிகவேகமாக பரவிவருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த வருடம் முதல் இரு மருத்துவர் குழு மேற்கொண்ட வந்த ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களின் ஆய்வில் சிறுநீரக மாற்றீடு செய்யப்பட்டிருந்த 20 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் தற்போது சிறுநீகர மாற்றீட்டு சிகிச்சைக்காக சுமார் 100,000 வரையானவர்கள் காத்திருப்பதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இவர்களுக்கும் Hepatitis C வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய நாடுகளிலும் இதே பிரச்சினை இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

SHARE