அல்சைமர் நோய் வராமல் தடுக்கலாம்.. இதுல1 டம்ளர் போதும்

169

கல்லீரல் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மஞ்சள் முக்கிய பங்கினை வகிக்கிறது.

தேவையானப் பொருட்கள்
  • மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
  • தேங்காய் பால் – 1 டம்ளர்
  • தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை

மிளகுத்தூள், தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் ஆகிய அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக கலந்து, அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

பின் அந்த பானத்தை குளிர வைத்து சிறிது நேரம் கழித்து குடிக்க வேண்டும்.

மற்றொரு முறை

கொதிக்கும் நீரில் மஞ்சள் தூளை சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைத்து, பின் அந்த நீரை குளிர வைத்து குடிக்கலாம்.

நன்மைகள்
  • மஞ்சள் தூளில் உள்ள குர்குமின் எனும் பொருள் அல்சைமர் நோயை ஏற்படுத்தும் பீட்டா-அமிலோயிட் பிளேக்குகளை மூளையில் சேராமல் தடுத்து, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
  • மஞ்சள் தூளில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மூளையில் ஏற்படும் பிற பிரச்சனைகளைக் குறைப்பதுடன், மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.
  • மஞ்சள் தூளில் உள்ள குர்குமின், கல்லீரலில் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை தடுத்து, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
SHARE