சமீப காலமாக சினிமா பிரபலங்களின் தற்கொலைகள் அதிகமாகி வருகிறது. அதிலும் சின்னத்திரை நடிகர்களின் தற்கொலைகள் அதிகம்.
கடந்த சில மாதமாக அதிகம் பேசப்பட்ட ஒரு விடயம் நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திகேயன் தற்கொலை. மீண்டும் அந்த விடயம் பேசு பொருளாக மாறிவருகின்றது.
தமிழில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் சுமங்கலி என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. அந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகர் பிரதீப் என்பவர் கடந்த வருடம் பிரபல தொலைக்காட்சி சீரியலான ரெட்டைவால் குருவி, இ.எம்.ஐ போன்ற சீரியல்களில் நடித்த நடிகை பவானி ரெட்டியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், திருமணம் முடிந்த ஒரு வருடத்திலேயே நடிகர் பிரதீப் ஹைதராபாத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து அவரது மனைவி பவானி கூறியதாவது, எங்களுக்குள் பெரிய சண்டைகள் எதுவும் இல்லை. ஆனால் இன்று காலை 2 மணியளவில் வெளியே சென்றுவருகிறேன் என்று சொல்லிவிட்டு போனார்.
திரும்பி வந்தவர் காலை நேரத்திலேயே அதிகமாக குடித்துக்கொண்டிருந்தார். நான் அதிகாலையிலேயெ ஷூட்டிங் சென்றுவிட்டேன்.
வீட்டிற்கு வந்தபோது அவர் இறந்து கிடந்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்று பவானி கூறியுள்ளார்.
வளர்ந்து வந்து கொண்டிருந்த தருணத்தில் தற்கொலை செய்துள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைக்கான காரணத்தில் இதுவும் ஒன்றா..?
விரக்தியின் எல்லையில் எடுக்கும் உடனடி முடிவுதான் தற்கொலை. தோல்வி வெட்கப்பட வேண்டிய ஒன்றல்ல. கோழைத்தனமே வெட்கப் படவேண்டியது.
தோல்வி கண்டவரை யாரும் பழிப்பதில்லை. தற்கொலை செய்பவரைத்தான் உலகம் பழிக்கும்.
உயிரையும் இழந்து, வாழ்வையும் இழந்து, கேவலத்தையும் அடையலாமா? தற்கொலைக்கு முயல்வோர் தவறாது சிந்திக்க வேண்டும். தற்கொலை எண்ணத்தை தகர்த்தெறிய வேண்டும்.
வாழ்ந்து காட்டுபவன் மட்டுமே மனிதன் என்று சொல்லிக்கொள்ளும் தகுதி படைத்தவன். தற்கொலை முயல்வோர் இதைத் தவறாது சிந்திக்க வேண்டும்..
இரண்டு பிரபலங்களினதும் மரணங்கள் இதைத்தான் சொல்லுகின்றது. விரக்தியின் எல்லையில் எடுக்கும் உடனடி முடிவு அவர்களின் வாழ்வை மட்டும் அல்ல அவர்களை சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கத்தான் செய்கின்றது.
எது எப்படி இருப்பினும் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர். உண்மை எப்படியும் வெளிவரும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது.
– See more at: http://www.manithan.com/news/20170503126828#sthash.SNKyNL5B.dpuf