இந்த பொருட்களை மட்டும் தானமாக கொடுத்து விடாதீர்கள்… பெரும் ஆபத்து

163

தானம் வழங்குவது உதவி செய்யக் கூடிய ஒரு நல்ல செயல் தான். ஆனால் ஜோதிடத்தின் படி, ஒருசில பொருட்களை தானமாக வழங்கினால், வாழ்வில் பெரும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமாம்.

பழைய உணவுகள்

பழைய உணவுகளை எப்போதும் தானமாக வழங்கக் கூடாது. ஏனெனில் அது நீதிமன்ற வழக்குகள் மற்றும் வருமானத்திற்கு அதிகமான செலவுகளை சந்திக்க வைக்குமாம்.

கூர்மையான பொருட்கள்

கூர்மையான கத்தி, கத்தரிக்கோல், ஊசி போன்ற ஆபத்தான பொருட்களை தானமாக கொடுக்கக் கூடாது. ஏனெனில் அது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துவதுடன், தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதங்களை அதிகரிக்கச் செய்யும்.

கிழிந்த துணிகள்

உடைந்த பொருட்கள் அல்லது கிழிந்த துணிகள் போன்றவற்றை எப்போதுமே தானமாக வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அந்த பொருட்கள் துரதிர்ஷ்டத்தை உண்டாக்குமாம்.

துடைப்பம்

ஜோதிடத்தின் படி, துடைப்பத்தை தானமாக வழங்குவது என்பது வீட்டில் இருக்கும் லட்சுமி தேவியை தானமாக வழங்குவதற்கு சமம் என்பதால், இது வீட்டில் பணப் பிரச்சனையை ஏற்படுத்துமாம்.

பிளாஸ்டிக் பொருட்கள்

பிளாஸ்டிக் பொருட்களை தானமாக வழங்கக் கூடாது. ஏனெனில் அது துரதிர்ஷ்டத்தை வரவழைப்பதுடன், ஒருவரது வாழ்க்கையின் வளர்ச்சியில் தடையை உண்டாக்குமாம்.

SHARE