பிரியாணி இலை மற்றும் க்ரீன் டீ பவுடர் கலந்து இயற்கை முறையில் தயாரித்த டீயை ஒரு நாளைக்கு 3 கப் குடித்து வந்தால், உடல் எடையை வேகமாக குறைப்பதுடன், 8 இன்ச் இடுப்பளவையும் குறைக்கலாம்.
தேவையான பொருட்கள்
- தண்ணீர் – 800 மிலி
- க்ரீன் டீ பவுடர்- 1 டேபிள் ஸ்பூன்
- பட்டை – 1 துண்டு
- பிரியாணி இலை – 3
- தேன் – சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அதில் பட்டை, பிரியாணி இலை, க்ரீன் டீ பவுடர் ஆகியவற்றை சேர்த்து மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி தேன் கலந்தால் மூலிகை டீ தயார்.
குடிக்கும் முறை
ஒரு நாளைக்கு 3 கப் டீ குடிக்க வேண்டும். அதில் முதல் கப் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மற்ற இரண்டு கப் சாதாரணமாக டீ பருகும் நேரங்களில் குடிக்கலாம்.
நன்மைகள்
- உடலின் மெட்டாபாலிசத்தை அதிகரிக்கும் மசாலாப் பொருட்கள் இந்த டீயில் உள்ளதால், இது அதிகப்படியான கலோரிகளை கரைத்து, செரிமான மண்டலத்தை சீராக்க உதவுகிறது.
- பட்டை உடலில் கொழுப்புக்களின் தேக்கத்தைக் குறைத்து, உடலின் அதிகப்படியான சர்க்கரையை உடைத்து, கொழுப்புக்களை கரைத்து உடலுக்கு தேவையான ஆற்றலாக வழங்குகிறது.
- பிரியாணி இலை உடலில் உள்ள அதிகப்படியான நீர்மத்தை வெளியேற்றி, செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்று உப்புசம் மற்றும் வாய்வு தொல்லைகள் வராமல் தடுக்கிறது.
குறிப்பு
இடுப்பளவு மற்றும் உடல் எடை வேகமாக குறைய வேண்டுமானால், இந்த டீயை தினமும் குடிப்பதோடு, தவறாமல் உடற்பயிற்சியையும், டயட்டையும் மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.
எச்சரிக்கை
இந்த டீயை கர்ப்பிணிகள், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் பெருங்குடல் பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக குடிக்கக் கூடாது.