அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 61 படத்தின் ஷூட்டிங் மிக மும்முறமாக நடந்துவருகிறது. அடுத்தவாரம் முதல் ஷூட்டிங் மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
இப்படத்தின் பாடலாசிரியர் விவேக் விஜயுடன் இருந்த அனுபவம் பற்றி மனம் திறந்துள்ளார்.
இந்த படத்தில் இரண்டு பாடல்களை எழுதினேன். அதில் ஒரு பாடலுக்காக நேரடியாக ஸ்பாட்டுக்கே சென்றேன். விஜய் சிரிப்புடன் என்னை வரவேற்றார். எனது முந்தய வேலைகளுக்காக பாராட்டினார். பின் சீனில் நடிக்க போய்விட்டார்.
நான் கவனித்து கொண்டே இருந்தேன். கையில் கத்தி வைத்து சண்டைபோட்டுக்கொண்டிருந்தார். ஒரே டேக்கில் ஸ்டண்டை முடித்துவிட்டார்.
அவர் மீண்டும் வந்த போது நான் அவரிடம் எப்படி இப்படி சிறப்பாக ஸ்டண்ட் முடித்துவிட்டீர்கள் என கேட்டேன். அவர் உடன் நீங்கள் எப்படி சரியான வார்த்தைகளை போட்டு அழகான பாடல்களை கொடுக்கிறீர்கள் என மறுகேள்வி கேட்டார்.
யாராவது அவரை பாராட்டினால் அவர் தடுப்பாட்டம் விளையாடுவார். மிகவும் அனபானவர், இனிமையானவர், தன்னை குறைத்து தான் பேசுவார் என சொல்கிறார் விவேக்.