கையெழுத்து நல்ல இருந்தா தலையெழுத்து நல்லா இருக்காது என்பார்கள். இதற்கு சச்சினை எடுத்துக்காட்டாக கூறியவர்களை எல்லாம் கூட பார்த்திருக்கிறேன்.
பள்ளியில் இருந்து கல்லூரி வரை, அலுவலகங்களில் கூட பலரை கண்டு இந்த சொல்லாடலுடன் ஒப்பிட்டு பேசி நகைத்து சென்றிருப்போம். ஒருவருடைய கையெழுத்தை வைத்து எப்படி தலையெழுத்தை கணிக்க முடியும்? இதோ கையெழுத்தை வைத்தும் ஒருவரை பற்றி கூற முடியும் என்கிறார்கள். உங்களுக்கு இது பொருந்துகிறதா என்பதை நீங்களே சரி பார்த்துக் கொள்ளலாம்
எழுத்தின் அளவு?
சிறியது: எல்லா விஷயத்திலும்நல்ல செறிவு இருக்கும். வாழ்க்கையின் மீது நேர் பார்வை இருக்கும். உங்கள் திட்டங்களில் கவனத்துடன் செயல்படுவீர்கள்.
பெரிது: உங்களிடம் பரந்த, அகலமான பார்வை இருக்கும். நீங்கள் எதிலும் எளிதாக சோர்வடைய மாட்டீர்கள். எதிலும் அங்கீகாரம் பெற விரும்புவீர்கள்.
எழுதும் போது எவ்வளவு சக்தியை வெளிப்படுத்துவீர்கள்?
கடினம்: உணர்சிகரமான நபராக இருப்பீர்கள்.
எளிதாக: உணர்சிகளை பெரிதாக வெளிப்படுத்த மாட்டீர்கள்.
எழுத்துகளுக்கு மத்தியிலான இடைவெளி?
குறைவு: நேரத்தை சரியாக பயன்படுத்த மாட்டீர்கள்.
சரியான அளவு: உங்களிடம் நல்ல மன தெளிவு இருக்கும்.
அகலம்: நீங்கள் சுதந்திரம் விரும்பும் நபராக இருப்பீர்கள். உங்களுக்கான இடத்தை நீங்கள் விரும்புவீர்கள்.
எந்தபக்கம் சாய்வாக இருக்கும்?
இடது: சுதந்திரமாக செயல்படும் நபர். நேர்: மூட் ஸ்விங் ஆகும். ஒரே உணர்வு நிலையில் இருக்க மாட்டீர்கள். இடம், சூழலுக்கு ஏற்றார் போல மாறிக் கொள்வீர்கள்.
வலது: உங்கள் உணர்சிகளை கட்டுப்படுத்திக் கொள்வீர்கள். அரிதாக தான் வெளிப்படுத்துவீர்கள்.
எழுதும் திசை?
மேல்நோக்கி: நம்பிக்கை அதிகமான நபர். எதையும் ஸ்போர்டிவாக எடுத்துக் கொள்வீர்கள்.
கீழ் நோக்கி: ஊக்கமின்மையின் அறிகுறி இது. அலை போல: உங்கள் மனநிலை சமநிலையில் இருக்காது.
சேர்த்து எழுதுதல்?
சேர்த்து: எதையும் லாஜிக்காக பார்ப்பீர்கள். அறிவுப்பூர்வமாக முடிவுகள் எடுப்பீர்கள்.
பிரித்து: புத்திசாலி, உள்ளுணர்வு சார்ந்து நடந்துக் கொள்வீர்கள்.
“I” எப்படி எழுதுவீர்கள்?
விளையாட்டு: நீங்கள் விளையாட்டுத்தனம் கொண்டு செயல்படுவீர்கள். மற்றவருடன் ஒப்பிடும் போது தனித்து காணப்படுவீர்கள்.
அடர்த்தியாக: அனைத்தையும் கவனித்து செயல்படுவீர்கள்.
“t” க்ராஸ் எப்படி?
ஹை க்ராஸ்: உங்களிடம் சுய கவுரவம் இருக்கும். உங்கள் நிலையில் நிற்பீர்கள். எதையும் உயர்ந்த அளவில் தான் எண்ணுவீர்கள்.
லோ க்ராஸ்: சுய கவுரவும் குறைந்து காணப்படும். உங்களை குறைந்த அளவில் தான் இலக்கு குறி வைப்பீர்கள்.
– See more at: http://www.manithan.com/news/20170505126861#sthash.bztzgaDc.dpuf