கோவிலாக நினைத்து வாழ்ந்து வந்த வீட்டையே தானமாக கொடுத்த சிவகுமார்!!

241

நடிகர் சிவகுமார் தான் வாழ்ந்துவந்த வீட்டை அகரம் பவுண்டேஷனுக்கு தானமாக கொடுத்துள்ளார்.

அனைவருக்கும் கல்வி கிடைக்கவேண்டும் என்ற முனைப்போடு நடிகர் சூர்யாவால் கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது அகரம் பவுண்டேஷன்.

இந்த பவுண்டேஷன் மூலம் பல்வேறு மாணவ, மாணவிகளின் கல்விக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகரும், சூர்யாவின் அப்பாவுமான சிவகுமார் அகரம் பவுண்டேஷனின் அலுவலக பணிகளுக்காக தான் வாழ்ந்து வந்த வீட்டை தானமாக வழங்கியுள்ளார்.

சிவகுமார் ஆரம்ப காலத்திலிருந்து தி.நகர் பகுதியில் தான் வாங்கிய சொந்த வீட்டில் வசித்து வந்தார்.

இங்குதான் சூர்யா, கார்த்தி, பிருந்தா ஆகியோர் பிறந்து வளர்ந்தனர். தற்போது, இவர்கள் மூவருக்கும் திருமணமாகி, குழந்தைகள் பிறந்தும் இதே வீட்டில்தான் ஒன்றாக வசித்து வருகிறார்கள்.

சிவகுமாரின் மனதுக்கு மிகவும் நெருக்கமான இந்த வீட்டை தற்போது ‘அகரம் பவுண்டேஷன்’ நிறுவனத்தின் அலுவலக பணிகளுக்காக தானமாக வழங்கியுள்ளார் சிவகுமார்.

இந்த வீட்டில் இருந்து சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சூர்யா ‘லட்சுமி இல்லம்’ என்ற பெயரில் கட்டியுள்ள பிரம்மாண்ட வீட்டிற்கு சென்றுள்ளனர்.

தற்போது அந்த வீட்டை ‘அகரம் பவுண்டேஷன்’ செயல்பாட்டிற்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

தான் கோவிலாக நினைத்து வாழ்த்து வந்த வீட்டை மாணவர்களின் கல்விக்காக தொண்டாற்றும் நிறுவனத்தின் செயல்பாட்டிற்கு சிவகுமார் தந்துள்ளது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.

SHARE