பிரித்தானியாவின் பக்கிங்ஹாம் அரண்மனையில் அவசர கூட்டம் நடைபெறப் போவதை தொடர்ந்து இணையத்தில் பல வதந்திகள் தீயாக பரவி வருகிறது.
இளவரசர் பிலிப் இறந்து விட்டதாகவும் அதற்காக அரண்மனையில் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிருப்பதாகவும் வதந்திகள் தொடர்ந்து இணையத்தில் பரவி வருகிறது.
சிலர் ராணிக்கு உடல் நிலை மிக மோசமாகி விட்டதால் இந்த அவசர கூட்டம் என வதந்தி பரப்பி வருகின்றனர்.
வதந்திகள் பரவியதை அடுத்து ஊடகங்கள் அரண்மனை வாசலில் குவிந்துள்ளனர். இதனால், பக்கிங்ஹாம் அரண்மனை பரபரப்புடன் காணப்படுகிறது.
அதே சமயம் அரண்மனையில் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவில்லை என்பதை செய்தியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
தற்போது வரை எதற்காக இந்த அவசர கூட்டம் என அரண்மனை தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
எனினும் கூட்டம் முடிந்த பின்னர் அரண்மனையிலிருந்து ஓர் அறிவிப்பு கண்டிப்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.