கணவனுடன் சண்டை… மனைவி செய்த விபரீத செயலால் பரபரப்பு!!!

221

கணவனுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 7000 அமெரிக்க டாலரை விழுங்கிய மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் கணவனுடன் சுற்றுலா செல்வதற்காக 7000 அமெரிக்க டாலர் பணத்தை சேமித்து வைத்துள்ளார். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிபின்னர் இந்த பணத்தை சேர்த்து வைத்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் சண்டை வந்ததை அடுத்து 100 டாலர் மதிப்புள்ள 70 நோட்டுகளை விழுங்கியுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் 57 நோட்டுகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மருத்துவமனை அறுவை சிகிச்சை மருத்துவர் கூறும் போது, 70 நோட்டுகளை விழுங்கிய அவரின் வயிறு மற்றும் குடலில் இருந்து 57 நோட்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. மற்ற நோட்டுகள் செறிமானமாகி பெருங்குடல் வழியாக வந்துவிடு்ம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

– See more at: http://www.manithan.com/news/20170505126863#sthash.lpNbMNLz.dpuf

SHARE