தங்களை விட வயது குறைந்த நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகைகள்- ஸ்பெஷல்

221

சினிமாவை பொறுத்தவரை ஹீரோவிற்கு 60 வயது ஆனாலும், 20 வயது ஹீரோயினுடன் டூயட் பாடுவார். அதை மக்களும் ஏற்றுக்கொள்வார்கள், ஆனால், தன்னை விட வயது குறைந்த ஹீரோக்களுடன் எந்த ஒரு ஹீரோயினும் நடிக்க முன்வர மாட்டார்கள் அப்படி நடித்த ஹீரோயின்கள் யார் என்று பார்ப்போம்.

ஜோதிகா

ஜோதிகா திருமணத்திற்கு முன் வரை செம்ம உச்சத்தில் இருந்தவர், இவர் ரஜினி முதல் சிம்பு வரை அனைத்து ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார், இதில் சிம்பு இவரை விட வயது குறைந்தவர்கள் என்றாலும் மன்மதன், சரவணா என்று இரண்டு படங்களின் ஜோடியாக நடித்துவிட்டார்.

நயன்தாரா

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை, இவரும் தன்னை விட ஒரு வருடம் வயது குறைந்த சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வேலைக்காரன் படத்தில் நடித்து வருகின்றார்.

கரீனா கபூர்

திருமணம் முடிந்தும் திரைக்கு வந்து கலக்கி வருகின்றார் கரீனா கபூர், இவர் தன்னை விட வயது குறைந்த இம்ரான் கான், அர்ஜுன் கபூருடன் நடித்து கலக்கியவர், இதில் அர்ஜுன் கபூருடன் முத்தக்காட்சிகளில் எல்லாம் நடித்து சர்ச்சையை உண்டாக்கினார்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய் தான் தற்போது உள்ள ஹீரோயின்களில் மிகவும் சீனியர், இவர் தன்னை விட வயது குறைந்த அபிஷேக் பச்சனை தான் திருமணமே செய்துள்ளார், அதுமட்டுமின்றி சமீபத்தில் இவர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார், இவருக்கும் ஐஸ்வர்யாவிற்கும் சுமார் 8 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணி முகர்ஜி

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து தற்போது சினிமாவை விட்டு விலகியிருப்பவர் ராணி முகர்ஜி, இவர் தன்னை விட 3 வயது குறைவான ஷாகித் கபூருடன் ஒரு படத்தில் ஜோடியாக நடித்தார்.

ப்ரியங்கா சோப்ரா

கோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட் வரை கலக்கி வரும் ப்ரியங்கா தன்னை விட 3 வயது குறைவான ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார்.

காத்ரீனா கைப்

காத்ரீனா கைப் பாலிவுட் சினிமாவின் அனைத்து கான் நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்த இவர் வளர்ந்து வரும் நடிகர் ஆதித்யா ராய் கபூருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார், இவர் காத்ரீனாவை விட 2 வயது குறைந்தவர்.

SHARE