காலை முதல் நள்ளிரவு வரை உடலில் என்ன நடக்கிறது என்று தெரியுமா?

215

நம் உடலை இயக்கும் உறுப்புகளின் நேரத்தை நாம் அறிந்து கொண்டால், உணவு, தூக்கம், வேலை போன்றவற்றை சரியான நேரத்தில் செய்து, ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.

இரவு 7-9 இதயத்தின் மேல் உறைக்கான நேரம்

பெரிகார்டியம் மூளையின் செயல்பாடு, இனப்பெருக்கச் செயல்பாடு ஆகியவற்றிற்கு பெரிதும் உதவக்கூடியது இந்த நேரத்தில் மிதமான ஓய்வு மற்றும் மசாஜ் செய்துக் கொள்ளலாம்.

இரவு 9-11 மூவெப்ப மண்டலம் (Triple Warmer)

இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. ரிலாக்ஸ் செய்வது, தூங்குவது, புத்தகங்கள் படிப்பது போன்றவற்றை செய்யலாம்.

இரவு 11- 1 பித்தப்பைக்கான நேரம்

இந்த நேரத்துக்கு தூங்கி இருக்க வேண்டும். உடலுக்கு ஓய்வு அவசியம். பித்தப்பையில் கற்கள் இருந்தால், இந்த நேரத்தில் வலி ஏற்படலாம்.

நள்ளிரவு 1-3 கல்லீரலுக்கான நேரம்

ஆழ்ந்த தூக்கத்துக்கான நேரம் இது. இந்த நேரத்தில் விழித்திருக்கக் கூடாது. அப்படி விழித்திருந்தால், கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

அதிகாலை 3- 5 நுரையீரலுக்கான நேரம்

இந்த நேரத்தில் ஆழ்ந்த தூக்கம் அவசியம். நன்றாக தூங்க வேண்டும்.

காலை 5-7 பெருங்குடலுக்கான நேரம்

தூங்கி எழுந்ததும் இளஞ்சூடான நீரை குடிக்க வேண்டும். 7 மணிக்குள் மலம் கழிப்பது நல்லது. நடைப்பயிற்சி செய்யலாம். காபி, டீ குடிக்கக் கூடாது.

காலை 7-9 வயிறு மற்றும் இரைப்பைக்கான நேரம்

காலை உணவை சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும். புரத உணவுகள், கலோரிகள் உள்ள மாவுச்சத்து உணவுகள், பழங்கள், நல்ல கொழுப்பு ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது.

காலை 9-11 மண்ணீரலுக்கான நேரம்

இந்த நேரத்தில் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். வேலை செய்வது, விளையாடுவது, உடல் உழைப்பில் ஈடுபடுவது போன்றவற்றை செய்யலாம்.

முற்பகல் 11-1 இதயத்திற்கான நேரம்

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். மகிழ்ச்சியாக இருப்பது, மற்றவர்களுடன் பேசுவது, சேர்ந்து வேலை செய்வது போன்றவற்றை இந்த நேரத்தில் செய்யலாம்.

மதியம் 1-3 சிறுகுடலுக்கான நேரம்

மதியம் சாப்பிட்ட உணவுகள் செரிமானம் அடையும் நேரம் இது. அதனால் சுறுசுறுப்புடன் ஏதேனும் ஒருசில வேலைகளை செய்வது நல்லது.

மாலை 3-5 சிறுநீர்ப்பைக்கான நேரம்

இந்த நேரத்தில் வேலை செய்வது, படிப்பது, மூலிகை டீ குடிப்பது, தண்ணீர் குடிப்பது போன்றவற்றை செய்யலாம்.

மாலை 5-7 சிறுநீரகத்திற்கான நேரம்

இந்த நேரத்தில் இரவு உணவை சாப்பிட வேண்டும். சோர்வாக இருக்கும் உடலுக்கு உணவை கொடுக்க வேண்டும். இதனால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.

SHARE