இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தொடர் துப்பாக்கி சண்டை நடந்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
சமீபகாலமாகவே பாகிஸ்தானின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்று ஜம்மு காஷ்மீரின் அர்னியா பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.
இந்நிலையில் இன்று காலை முதலே பாவானி, பாபா கோவாரி, கல்சியான் ஆகிய மூன்று கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் அக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.