பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள இம்மானுவேல் மேக்ரான் தன்னுடைய அரசாங்கத்திற்கு புதிய பிரதமரை தெரிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில் இம்மானுமேல் மேக்ரான் ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளார்.
நேற்று பாரீஸில் நடைபெற்ற அரசு விழாவில் மேக்ரான் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக்கொண்டார்.
பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் பேசிய மேக்ரான், ‘பிரான்ஸ் நாடு எந்த சூழ்நிலையிலும் பின்னோக்கி செல்லவில்லை. ஒரு வளமையான சீர்த்திருத்தத்தை மேற்கொள்ள கடினமாக உழைப்பேன்’ என உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், தனது அரசாங்கத்தை வழி நடத்த புதிய பிரதமர் ஒருவரை மேக்ரான் தெரிவு செய்ய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், பிரதமர் பதவிக்கு தெரிவு செய்யப்படுவது யார் என்பது தற்போது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் Le Havre நகர் மேயராக தற்போது பதவி வகித்து வரும் Edouard Philippe என்பவருக்கு இந்த பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமரை தெரிவு செய்த பின்னர் முதன் முதலாக அண்டை நாடான ஜேர்மனிக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு சான்சலருடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து மேக்ரான் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.