மறைந்த பொப் ஸ்டார் மைக்கேல் ஜாக்சனின் மகளான பாரீஸ் ஜாக்சன் இன்ஸ்டாகிராமில் அரை நிர்வாண படத்தை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், நிர்வாணம் என்பது இயற்கையானது, நாம் அனைவரும் மனிதர்கள் என்பதன் ஒரு பகுதி தான் நிர்வாணம் என பதிவிட்டுள்ளார் பாரீஸ் ஜாக்சன்.
மேலும் தன்னை இவ்வுலகுடன் தொடர்பு கொள்ள நிர்வாணம் உதவுகிறது என்றும், பாலியல் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் என்னுடைய படங்கள் உங்களை வருந்த வைத்தால் பின்தொடர வேண்டாம், இதற்காக நான் மன்னிப்பும் கோரப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.