வாழ்க்கையில் ஒவ்வொருவருமே தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் வேலை, எதிர்காலம் என்று ஆர்வமாக இருப்பீர்கள் அல்லவா?
ஆனால் அந்த தருணத்தில் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, சில நல்ல பழக்கங்களை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
உணவில் கவனம்
அன்றாடம் ஜங்க் புட் எனும் ஆரோக்கியம் குறைவான உணவுகளை தவிர்த்து, ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் ரீதியாக ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளின் ஆபத்தை தடுக்கலாம்.
க்ரீன் டீ
க்ரீன் டீயில் ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் அதிகமாக நிறைந்துள்ளதால், அதை 20 வயதில் இருந்தே குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சுவைக்காக சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்துக் கொள்ளலாம்.
உடற்பயிற்சி
தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம் என்பதால், 20 முதல் 40 நிமிடம் நடை அல்லது ஒட்டம் போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும்.
இதனால் உடலின் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுவதுடன், உடல் பருமன் பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும்.
யோகா
தினமும் நீங்கள் யோகாவை ஒரு பயிற்சியாக செய்து வர வெண்டும். இதனால் மன அழுத்தப் பிரச்சனையில் இருந்து விடுபட்டு இளமையாக இருக்கலாம்.
சரும பராமரிப்பு
ஆரோக்கியமான சருமம், நல்ல புத்துணர்வை தருவதால், சருமத்தின் மீது அதிக அக்கறை கொள்வது மிகவும் அவசியம்.
ஒவ்வொரு பருவத்திலும் சரும மாற்றம் ஏற்படுவதால், 20 வயதில் இருந்தே சருமத்தை சுத்தம் செய்தல், இறந்த செல்களை நீக்குதல் போன்றவற்றை தவறாமல் செய்ய வேண்டும்.
முக்கியமாக இரவு உறங்கச் செல்லும் முன் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.
டீ மற்றும் காபி
கால்சியம் அதிகம் உள்ள பால் போன்ற திரவ உணவுகளை எடுத்துக் கொள்வது எலும்பு மற்றும் உடலை வலுமையாக்கும்.
டீ மற்றும் காபி போன்றவற்றில் அதிக காஃபைன் நிறைந்திருப்பதால், அது சருமத்திற்கு பாதிப்பை தரும். எனவே அடிக்கடி அதிகமாக குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
பற்கள் சுத்தம்
உடலின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ அதேபோல் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவதும் மிகவும் முக்கியமாகும்.
இதனால் மஞ்சள் கறை, வாய் துர்நாற்றம் இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.