தமிழகத்தைச் சேர்ந்த ஐசக் தேவக்குமார் சீன பள்ளியில் 2016-ஆம் ஆண்டிற்கான சிறந்த வெளிநாட்டு ஆசிரியர் என்ற விருதைப் பெற்றுள்ளார்.
தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் அடுத்து உள்ள கிருஷ்ணாம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஐசக் தேவகுமார்.
இவர் சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில் இரண்டு ஆண்டுகளாக கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரது சிறப்பான பணியை பாராட்டி சீன அரசு 2016-ஆம் ஆண்டிற்கான சிறந்த வெளிநாட்டு ஆசிரியர் என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளது.