தீப்பிடித்த சென்னை சில்க்ஸ்… உள்ளே எவ்வளவு தங்கம், வெள்ளி, வைரம் இருக்கிறது என்று தெரியுமா??

262

தி. நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ரூ. 300 கோடி வரை சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீகுமரன் தங்க நகைமாளிகையில் 400 கிலோ தங்கம், 2000 கிலோ வெள்ளி, ரூ. 20 கோடி மதிப்பிலான வைர நகைகள் இருந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

நகைக்கடையில் உள்ள லாக்கரில் உள்ள நகைகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றும் கட்டிடத்தை இடிக்கும் போதுதான் நகைகளை மீட்க முடியும் என்றும் காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ.80 கோடி துணிகள்

நாசம் தரைத் தளத்திலிருந்த நகைக்கடையில் இருந்த நகைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருகத் தொடங்கின. துணிக்கடையிலும் குடோனிலும் தீ பரவியது. 7 தளங்களிலும் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் புகைமூட்டம் ஏற்பட்டது. சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் இருந்த 80 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகி விட்டதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

400 கிலோ தங்கம்

நகைக்கடையில் 400 கிலோ அளவிற்கு தங்க நகைகள் இருந்ததாகவும், 2000 கிலோ அளவிற்கு வெள்ளிப் பொருட்கள் இருந்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காப்பீடு செய்யப்பட்டுள்ளது

நகைகள், துணிகளுக்கு சென்னை சில்க்ஸ் நிறுவனம் காப்பீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைக்குள் 150 டிகிரி வரை வெப்பம் சூழ்ந்துள்ளதால் உள்ளே யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

லாக்கரில் தங்கம், வைரம்

நகைக்கடையில் உள்ள லாக்கரில் உள்ள நகைகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றும் கட்டிடத்தை இடிக்கும் போதுதான் நகைகளை மீட்க முடியும் என்றும் காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

– See more at: http://www.manithan.com/news/20170602127439#sthash.qaV9HolH.dpuf

SHARE