அரங்கத்தையே அழவைத்த மாற்றுத்திறனாளி…நெகிழ்ச்சி சம்பவம்

314

அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் அரங்கைத்தையே அழவைத்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவில் America’s Got Talent 2017 என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் திறமை உள்ளவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கலாம்.

அந்த வகையில் காது கேட்கும் திறனை இழந்தாலும், இளம் பெண் ஒருவர் தன்னுடைய இசை அதிர்வுகளை பாதங்களின் வழியே உணர்த்திய அதிசயம் நடந்துள்ளது.

இவர் பாடிய பாடலைக் கேட்டு அரங்கில் இருந்த ஒட்டு மொத்த மக்களின் கண்களில் தண்ணீர் வந்தது. அந்த அளவிற்கு இருந்தது அப்பெண்ணின் திறமை.

அதுமட்டுமின்றி அங்கிருந்த நடுவர்களில் சிலரும் தங்கள் கண்களை ஒன்றும் தெரியாதது போல், துடைத்துக் கொண்டனர்.

பாடல் முடிந்தவுடன் அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து கைதட்டி ஆரவாரம் செய்த போது, அப்பெண் உணர்ச்சியை அடக்கமுடியாமல் அழுதார். இதைக் கண்ட அவரின் தந்தை சற்றும் நேரம் பிரமித்து நின்றார்.

தற்போது வரை இந்த வீடியோவை 54 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். பார்த்த அனைவரும் தங்கள் கருத்துக்களில் பார்க்கும் எங்களுக்கு கண்ணீர் வருகிறது என்று பதிவேற்றம் செய்துள்ளனர்.

– See more at: http://www.manithan.com/news/20170607127562#sthash.vf9TfYH8.dpuf

SHARE