பிரித்தானிய பொதுத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் தெரேசா மே பெக்சயர் Sonning வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
அதேவேளை தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் வடக்கு லண்டன் Holloway யில் வாக்குப் பதிவு செய்துள்ளார்.
மேலும், ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் தலைவர் நிக்கோலா ஸ்டர்ஜன் கிளாஸ்கோவிலும் ஜனநாயக ஒன்றியக் கட்சித் தலைவர் ஆர்லியன் ஃபாஸ்டர், Brookeborough வாக்குச் சாவடியிலும் ஸ்கொட்லாந்து தொழிற்கட்சித் தலைவர் Kezia Dugdale எடின்பேர்க்கிலும் வாக்களித்துள்ளனர்.
பிரித்தானிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவுகள் ஆரம்பம்
பிரித்தானியாவில் மாத்திரமின்றி சர்வதேச ரீதியில் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரித்தானிய பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தேர்தலில் வாக்களிப்பதற்காக 46.9 மில்லியன் மக்கள் தகுதி பெற்றுள்ளனர். அந்தவகையில், நாடளாவிய ரீதியில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வாக்குச் சாவடிகள் யாவும் திறக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை மக்கள் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருசில தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்று நள்ளிரவிற்குள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, இறுதி முடிவுகள் நாளை வெள்ளிக்கிழமை நண்பகல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.