வடகொரியாவின் புதிய ஏவுகணை போர்க்கப்பலை அழிக்கும் திறன் கொண்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா நேற்று முன்தினமும் புதிய ஏவுகணை ஒன்றை விண்ணில் ஏவி பரிசோதனை நடத்தியது.
இந்த ஏவுகணை சோதனை வெற்றியில் முடிந்ததாக வடகொரிய அரசு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மேலும் குறிப்பிடுகையில், கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் அதற்கு குறிப்பிட்ட இலக்கை ஏவுகணை தாக்கியது.
நடுக்கடலில் உள்ள எதிரிகளின் போர்க்கப்பலைக்கூட துல்லியமாக தாக்கி அழிக்கும்.
இதனை பார்வையிட்ட ஜனாதிபதி, விஞ்ஞானிகளை பாராட்டினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.