அபூர்வ நோயால் அவதிப்பட்டு வரும் 6 வயது சிறுமி

250

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் தோல் உதிரும் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டு 6 வயது சிறுமி ஒருவர் அவதிப்பட்டு வரும் சம்பவம் அவரது பெற்றோரை கடுமையாக பாதித்துள்ளது.

டென்னசி மாகாணத்தில் உள்ள ஓல்டுவா பகுதியில் குடியிருந்து வருகின்றனர் Megan and Tyson குடும்பத்தினர். இவர்களது மகள் 6 வயதேயான Hanna Barrott தோல் உதிரும் அபூர்வ நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

சிறுமி ஹன்னா பிறந்ததில் இருந்தே அவரது தோல் மிக வேகத்தில் முதிர்ச்சி அடைந்து வருவதால் அது வரண்டு தினசரி உதிர்ந்து வருகிறது.

சிறுமியை தாக்கியுள்ள இந்த அபூர்வ நோயானது உலகில் 600,000 பேர்களில் ஒருவருக்கு மட்டுமே வரக்கூடியது என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அபூர்வ நோயால் தாக்கப்பட்டுள்ள சிறுமி ஹன்னா தினசரி இரண்டு முறை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார். இதனால் வரண்டு போகும் அவரது தோலில் வெடிப்புகள் ஏற்படாமல் காக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் தோல் வரண்டு உதிர்ந்து வருவதை தடுக்க முடியவில்லை என பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமின்றி பொதுமக்களிடம் இருந்து கடுமையான சொற்களை கேட்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறும் அவர்கள், சிறுமியின் நிலை குறித்து கேள்வி எழுப்புபவர்களிடம் விளக்கம் அளிப்பதே தங்களுக்கு பெரும் வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுமியின் தற்போதைய நிலையில் அவரது தோலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறினால் அது அவரது உயிருக்கு ஆபத்தாக முடியும் எனவும் பெற்றோர்கள் வருத்தமுடன் தெரிவித்துள்ளனர்.

– Valampuri

SHARE