அகதிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி குறைப்பு – சுவிஸ் 

186

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் பெற்றுள்ள மற்றும் புகலிடத்திற்காக காத்திருக்கும் அகதிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை குறைப்பதற்கு அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளை சாராத பிற நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர்களுக்கு மட்டும் புதிய விதிமுறை நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து சுவிஸ் சட்ட அமைச்சரான Simonetta Sommaruga வெளியிட்டுள்ள தகவலில்,

புலம்பெயர்ந்தவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் அரசு ஈடுப்பட்டு வருகிறது.இப்பணியில் ஏற்படும் செலவினங்களை ஈடு செய்வதற்காக அரசு புதிதாக திட்டம் ஒன்றை ஆலோசித்து வருகிறது.

இதன் அடிப்படையில், வெளிநாட்டினர்கள் பெறும் அரசு நிதியுதவியை குறைக்க அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

எனினும், சுவிஸிற்கு வரும் வெளிநாட்டினர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும் வரை அவர்களுக்கு நிதியுதவி அளிக்க கூடாது என்ற கோரிக்கையை சட்ட அமைச்சர் நிராகரித்து விட்டார்.

ஒவ்வொரு மாகாணத்திற்கும் இந்த நிதியுதவி தொடர்பான மாற்றம் 16 சதவிகிதம் முதல் 43 சதவிகிதம் வரை இருக்க வாய்ப்புள்ளது.

இந்த மாற்றம் தொடர்பான ஆலோசனை முடிவு பெற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

– Valampuri

SHARE